being created

திருவம்மானை

From Tamil Wiki

திருவம்மானை திருவாசகத்தில் அமைந்துள்ள அம்மானை என்னும் சிற்றிலக்கியம். சிவபெருமானின் கோலத்தையும், இயல்புகளையும், எழுந்தருளும் தலங்களையும் பெண்கள் விளையாடும் அம்மானைப் பாடல்களில் பாடும் பதிகம்.

ஆசிரியர்

திருவம்மானையை இயற்றியவர் மாணிக்கவாசகர். திருவாசகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

நூல் அமைப்பு

அம்மானை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்ததால் திரு அம்மானை எனப் பெயர் பெற்றது. ‘திரு’ என்பது அடைமொழி. ‘அம்மானை’ என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. இது, மூன்று பெண்கள் கூடி மூன்று காய்களை வைத்துக்கொண்டு ஆடுவது. அவ்வாறு விளையாடுங்கால் பாடுவது போல அமைந்துள்ளது இப்பகுதி.

இறை அனுபவத்தினால் உண்டாகும் ஆனந்தம் திருவம்மானையில் பாடப்படுவதால் 'ஆனந்தக் களிப்பு' என்றும் அழைக்கப்பட்டது.

திருவம்மானை 20 தரவு கொச்சகக் கலிப்பாக்களால் ஆனது.



பாடல் நடை

கல்லைப் பிசந்து கனியாக்கி

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை    வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்    கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை    வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்    தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்     ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179

உசாத்துணை

சைவம்.ஆர்க், திருவம்மானை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.