மாகறல் கார்த்திகேய முதலியார்

From Tamil Wiki
Revision as of 09:48, 6 May 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "மாகறல் கார்த்திகேய முதலியார் (1857 -1916 ) தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர். மொழி நூல், தமிழ்ச் சொல் விளக்கம், வேளிர் வரலாறு மாண்பு, ஆத்திசூடி முதல் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாகறல் கார்த்திகேய முதலியார் (1857 -1916 ) தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர். மொழி நூல், தமிழ்ச் சொல் விளக்கம், வேளிர் வரலாறு மாண்பு, ஆத்திசூடி முதல் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதினார். தமிழ் மொழியிலிருந்து பஞ்ச திராவிடம், பாலி, காண்டி ஆகிய மொழிகள் தோன்றின என்பதை தமது ஆராய்ச்சிகளாக வெளிப் படுத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாகறல் கார்த்திகேய முதலியார் 1857-ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேட்டூரில் பிறந்தார். சபாபதி நாவலரிடம் தமிழ் கற்றார். இலங்க கண்டி வெஸ்லேனியன் கல்லூரியில்

இலக்கிய வாழ்க்கை

மாகறல் கார்த்திகேய முதலியாரின் குறிப்பிடத்தக்க படைப்பு மொழிநூல் (PHILOLOGY) 1913-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பாயிரவியல், இலக்கணவியல், முதனிலையியல் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். பாயிரவியல் தமிழின் தொன்மை, தமிழ் வடமொழிக்கு காலத்தால் முந்திய தன்மை, தமிழின் தோற்றம், நாவின் இயற்கையை ஒட்டியே தமிழில் ஒலிகள் அமைந்த தனமைசமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள், இலக்கண விதிகள் ஆகியவை ஆராயப்படுகின்றன. இலக்கணவியலில் எழுத்துக்கள் மற்றும் ஒலிகளின் தொடக்கமும், அவை உருவான விதமும், புணர்ச்சி விதிகளும் கூறப்பட்டுள்ளன.


கமிழில்‌ இடுகுறியாகச்‌ சொல்லில்லையென்பதும்‌ எல்லாச்‌ சொல்லும்‌ பொருள்‌ குறிக்கும்‌ காரணச்‌ சொல்லே என்பதும்‌ மாகறலார்‌ கருத்தாகும்‌.

மாகறலார்‌ மொழியாராய்ச்சியின்‌ சில முக்கியக் கூறுகள்

  • தமிழ்‌ அடிப்படையில்‌ முதன்‌ மதலில்‌ தமிழில்‌ வெளி வந்த மொழி நூலாக இருத்தல்‌.
  • குமரிக்கண்டக்‌ கொள்கையையும்‌ தமிழரை முதன்‌ மரந்தரெனவும்‌ தமிழை முதன்‌ மொழியெளவும்‌ ஒப்பிக்‌ கூறுதல்‌.
  • தமிழ்‌ இலக்கணக்‌ கூறுகளை அடியொற்றி மொழியாய்வு செய்யப்பட்டிருத்தல்‌. *
  • இடுகுறி அல்லாமல் எல்லாச்‌ சொல்லும்‌ காரணச்‌ சொல்லே என்பதை ஏற்று நூலின்‌ முதனிலையியல்‌ என்னும்‌ பகுதியில்‌ சில சொற்களுக்குச்‌ சொற்‌ பொருட்காரணம்‌ காட்டமுற்பட்டமை



.மாகறல் கார்த்திகேய முதலியார் மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் தமிழ் மொழி பற்றிய கட்டுரைகளை எழுதினார். வேர்ச் சொல் ஆய்விலும் இவர் சிறந்தவராக இருந்தார்.

நூல்கள்

  • மொழி நூல்
  • தமிழ்ச் சொல் விளக்கம்
  • வேளிர் வரலாறு மாண்பு
  • ஆத்திசூடி முதல் விருத்தியுரை

உசாத்துணை

மொழிநூல், தமிழ் இணைய கல்விக் கழகம்