மறம் (யாப்பியல்)
மறம் கலம்பகத்தின் பதினெண் உறுப்புகளில் ஒன்று. மறக்குல மகளை ஒரு மன்னன் மணக்க வேன்டி தூதன் ஒருவனை அனுப்ப அத் திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை, அம்மறச் சாதியின் தலைவன் சினந்து கூறுவது.
இலக்கணம்
மறம் என்றால் வீரம் என்று பொருள். புறத்துறைகளில் ஒன்று மகள் மறுத்து மொழிதல் என்ற துறை ஆகும். மறவர் குலத்தில் பிறந்தவள் ஒரு பெண். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்புகின்றான். எனவே, மறவர்களிடம் ஒரு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் மறவர்களிடம் சென்று மன்னன் கூறிய செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட மறவர்கள் அந்தத் தூதுவனிடம் தங்கள் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தூது அனுப்பிய மன்னனின் வீரத்தை இகழ்ந்து கூறுகின்றனர். இறுதியில் மன்னனுக்குத் தம் குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இதுவே மகள் மறுத்து மொழிதல் என்ற துறையின் பொருள். மறவர்கள் தம் மறப் பண்பை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதே மறம் என்ற கலம்பக உறுப்பு.
உதாரணப் பாடல்கள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.