being created

திருவாரூர் நான்மணிமாலை

From Tamil Wiki

திருவாரூர் நான்மணிமாலை (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய, திருவாரூர்த் தலத்தையும் தியாகேசரையும் போற்றிப் பாடும் நூல். நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றியபின் தருமபுரம் செல்லும் வழியில் திருவாரூருக்கு வந்து தியாகேசரை வழிபட்டு, திருவாரூர் நான்மணிமாலையைப் பாடினார்.

நூல் அமைப்பு

நான்மணிமாலை வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் நான்கு பாவகைககளால் ஆன பாடல்களால் மாறி மாறி மாலையைப்போல் கோர்க்கப்பட்டு வரும் சிற்றிலக்கியம். நாற்பது பாடல்களில் அந்தாதித் தொடை அமைந்து வருவது.

திருவாரூர் நான்மணி மாலையில் திருவாரூரின் சிறப்புகள் பேசப்படுகிறன. இம் மாலையில் அகத்துறைச் செய்யுட்கள் சில தலைவி சொல்வதாகவும் தோழி சொல்வதாகவும் உள்ளன. அகழி, கொடிகள், சோலை, மாடங்கள் என ஊரின் வர்ணனைக்குப்பின் தியாகேசர் ஆலயமும், அங்கு இருக்கும் சன்னிதிகளும், மண்டபங்களும், புராணச் செய்திகளும், தியாகேசரின் அருளும் கூறப்படுகின்றன.

புராண, வரலாற்றுச் செய்திகள்
  • திருவாரூர் தேரை 'நீள் கொடிஞ்சித் தேர்' என்று சிறப்பிக்கிறார். தியாகேசர் இந்தத் திருத் தேரில் எழுந்தருளும் போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்படும்
  • தியாகேசருக்கு இருந்தாடழகர் என்ற பெயரும் வழங்குகிறது
  • முசுகுந்த சக்ரவர்த்திக்கு இந்திரன் தியாகேசரை அளித்தான். முசுகுந்தனுக்கு அருள் செய்வதற்காக தியாகேசர் பூவுலகுக்கு வந்தாட்
  • மன்மதனை எரித்தது
  • மார்க்கண்டேயனைக் காக்க யமனை உதைத்தது,
  • திருமால் வெள்ளை ரிஷபமாக வாகனமாகி ஈசனைத் தாங்குதலும், அதற்காகப் சிவன் பிரளய காலத்தில் திருமாலின் எலும்புக்கூடாகிய கங்காளத்தைச் சுமந்ததும்
  • அம்பலவாணனின் சபாமண்டபம் என்றும் அழைக்கப்படும் தேவாசிரயன் மண்டபம் என்ற ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு கூறப்படுகிறது.
  • திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மை எளிய வேடனான கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரையும் ஊனையும் எற்றுக்கொண்டது, பார்ததன் வில்லாலடித்ததைப் பொறுத்தது, வந்திகிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டது, சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவைநாச்சியாரிடம் தூது சென்றது என அன்பர்க்கு எளியனான தன்மை கூறப்படுகிறது

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.