under review

சுகுணசுந்தரி

From Tamil Wiki
Revision as of 09:13, 6 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved by Je to review)

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

சுகுணசுந்தரி

சுகுணசுந்தரி (1887) (சுகுணசுந்தரி சரித்திரம்) மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இரண்டாவது நாவல். பிரதாப முதலியார் சரித்திரத்துக்குப் பிறகு வேதநாயகம்பிள்ளை எழுதிய இரண்டாவது நாவல் இது. இது ஒரு வரலாற்றுக் கற்பனை நாவல். புவனசேகரம் என்னும் கற்பனை ஊரில் நிகழும் கதை. அந்நகரத்தின் தலைவர் நராதிபனின் மகள் சுகுணசுந்தரி கதைநாயகி.

எழுத்து,பிரசுரம்

பிரதாப முதலியார் சரித்திரத்துக் கிடைத்த வரவேற்பைக் கண்டு இந்நாவலை எழுதியதாக வேதநாயகம்பிள்ளை முன்னுரையில் சொல்கிறார். இது பிரதாப முதலியார் சரித்திரத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக யோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நீளம் காரணமாக தனிநூலாக ஆகியிருக்கலாம் என்றும் சிட்டி சிவபாதசுந்தரம் அவர்களின் தமிழ்நாவல் நூலில் சொல்கிறார். 1887ல் வேதநாயகம் பிள்ளை இந்நாவலை வெளியிட்டார்.

கதைச்சுருக்கம்

நராதிபன் என்னும் அரசன் புவனசேகரம் என்னும் ஊரை ஆள்கிறான். அவன் மகள் சுகுணசுந்தரி. அங்கே ஓர் அனாதைக்குழந்தை கொண்டுவரப்படுகிறது. அது ஓர் இளவரசன் என்றும், அவனைக் கொல்ல சிலர் தேடுவதாகவும் சொல்லப்படுகிறது.அவனுக்கு புவனேந்திரன் என பெயரிடப்படுகிறது. சுகுணசுந்தரி, புவனேந்திரன் இருவரும் சேர்ந்து கல்விகற்கிறார்கள். உடன் நராதிபனின் அமைச்சரின் மகன் மதுரேசனும் கல்வி பயில்கிறான்.அவன் கெட்டவன். புவனசேகரத்தில் பஞ்சம் வருகிறது. சாலைகள் சேதமடைந்துவிடுவதனால் உணவுப்பொருட்கள் பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் மாபெரும் பலூன்களில் எடுத்துச்செல்லப்படுகின்றன. ஒரு பலூனில் ஏறி தந்தையை காணச்செல்லும் சுகுணசுந்தரி கடத்தப்படுகிறாள். அவளை கொல்ல முயற்சி நடக்கிறது. அவள் உயிர்தப்பி ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கக் கன்னிமாடத்தில் அடைக்கலம் புகுகிறாள். அமைச்சர் தன் அரசர் புவனேந்திரனைக் கொல்ல சதிசெய்கிறார். தப்பிச்செல்லும் புவனேந்திரன் கன்னிமாடம் சென்று சுகுணசுந்தரியை விடுவிக்கிறான். அங்கே அவன் தன் திறமையால் அமைச்சர் ஆகிறான். அமைச்சரின் சூழ்ச்சிகளை முறியடித்து புவனசேகரத்தை கைப்பற்றி சுகுணசுந்தரியை புவனேந்திரன் மணக்கிறான். புவனேந்திரன் ஆரியதேசம் என்னும் நாட்டின் இளவரசன் என தெரியவருகிறது.

இலக்கிய இடம்

சுகுணசுந்தரி கதை பின்னாளில் தமிழில் பொதுவாசிப்புக்கான வரலாற்றுப் புனைவுகள் உருவாக முன்னோடியாக அமைந்தது. பெண்கல்வி போன்ற கருத்துக்கள் நாவலில் பேசப்படுகின்றன.

உசாத்துணை

தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம்- கிறிஸ்தவ இலக்கிய சங்கம்

சுகுணசுந்தரி கௌரா பதிப்பகம் வெளியீடு

தமிழ் இணைய நூலகம்