second review completed

சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 19:45, 12 March 2024 by Tamizhkalai (talk | contribs)
பள்ளிச் சின்னம்

தேசிய வகை சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

குழுப்படம் (1960)

சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி, 1946-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்பள்ளி தொடக்கக்காலத்தில் தேசிய மாதிரி லாடாங் கும்புலான் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பள்ளிக்கென புதிய கட்டிடம் கிடைத்த பிறகு 1991-ம் ஆண்டு சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டது. தொடக்கக்காலத்தில் சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 37 மாணவர்கள் கல்வி கற்றனர். ஓர் ஆசிரியர் பணியாற்றினார்.

கட்டிடம்

1961-ம் ஆண்டு வரை சுங்கை தெராப் தோட்டத்தமிழ்ப்பள்ளி 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட ஒரு வகுப்பறையைக் கொண்டு இயங்கி வந்தது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பள்ளி இயங்கி வந்தது. பள்ளியின் நிர்வாகங்களைத் தோட்ட நிர்வாகிகளே நிர்வகித்தனர்.

அக்டோபர், 1986-ம் ஆண்டு அரசாங்க உதவியின் வழி ஒரு புதிய கட்டிடம் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. ஆரம்பக்காலத்தில சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் மட்டும்தான் கல்வி கற்றனர். நான்காம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை சிக்கலினால் கோல சிலாங்கூரில் அமைந்துள்ள வாகீசர் தமிழ்ப்பள்ளியில் கல்வியைப் பெற்றனர்.

இணைக் கட்டிடம் (1998)

பள்ளியில் நிலவிய வகுப்பறை பற்றாக்குறை சிக்கலைத் தீர்க்க கோல சிலாங்கூர் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளியில் மேலும் ஒரு இணைக்கட்டிடத்தைக் கட்ட முயற்சித்தனர். சிலாங்கூர் மாநில  மானியம் 50,000/மமலேசிய ரிங்கிட்டின் உதவியோடு 1998-ம் ஆண்டு பள்ளியில் இரண்டு இணைக்கட்டிடங்கள் கட்டப்பட்டன. இணைக்கட்டிடங்களுக்கான கல்நாட்டு விழா, அக்டோபர் 26, 1998-ல் சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் வேலு தலைமையில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு பள்ளியில் இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட ஓர் இணைக்கட்டிடம் கட்டப்பட்டது.

இன்றைய நிலை

சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி தற்போது கட்டிட அமைப்பிலும் சில வசதிகளுடன் வளர்ச்சியடைந்து இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).
  • SJKT Ladang Sungai Terap


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.