under review

சரோஜினிதேவி

From Tamil Wiki
Revision as of 20:25, 10 March 2024 by Tamizhkalai (talk | contribs)

சரோஜினிதேவி (பிறப்பு: ஜூன் 8, 1949) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சரோஜினிதேவி இலங்கை யாழ்ப்பாணம் மாதகல்லில் கணபதிப்பிள்ளை, பாக்கியம் இணையருக்கு ஜூன் 8, 1949-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார்.

ஆசிரியப்பணி

சரோஜினிதேவி பலாலி கனிஷ்டபல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர். விவசாய விஞ்ஞான ஆசிரியர். பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சில்லாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2001-2010 வரை அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

சரோஜினிதேவி சாரணிய தேசிய பயற்றுனர் சபையின் அங்கத்தினர், விரிவுரையாளர். படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆர்வம் வரும் வகையில் உளவள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

சரோஜினிதேவி கட்டுரை, கதை, பாடல்கள், கவிதை, வாழ்த்து மடல்கள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் 'இனிய நந்தவனம்', 'தமிழ் அன்னை' ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன. 'ஈழத் தமிழர் வரலாறு' என்ற நூலை வெளியிட்டார். சாரணியம் தொடர்பிலான நூலை ஆங்கிலத்திலிஇருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

விருதுகள்

  • கவிதைக்காக பர்மாவில் இனிய நந்தவனம் வழங்கிய விருது.
  • இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய மேன்மை விருது இருமுறை வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்

  • ஈழத் தமிழர் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page