உடையார்
உடையார் ( ) பாலகுமாரன் எழுதிய வரலாற்று நாவல். ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய பின்புலத்தில் சோழர்கால வாழ்க்கைமுறை, மதம் ஆகியவற்றை பேசுபொருளாக்கி எழுதப்பட்டது
எழுத்து,வெளியீடு
இந்நாவலின் முதல் பகுதி இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. ஆறுபகுதிகள் கொண்ட இந்நாவலில் எஞ்சியவை நேரடியாக நூல்வடிவம் பெற்றன. பாலகுமாரன் இந்நாவலை சொல்லி பதிவுசெய்து எழுதவைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்
கதைச்சுருக்கம்
தன் சிறியதந்தை மதுராந்தகன் என்னும் உத்தமசோழனுக்கு முடிசூட்டியபின் சோழநாடெங்கும் சுற்றிவருகிறார் பின்னாளில் ராஜராஜ சோழன் என முடிசூட்டிக்கொள்ளப்போகும் அருண்மொழித்தேவர். அப்போது சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய ஒரு தாசியை கண்டு விரும்பி அவளை தன்னுடன் அழைத்துச்செல்கிறார். பின்னாளில் அவர் அவருடைய நான்காம் மனைவியாகிய பஞ்மான் தேவி ஆகிறார். தான் முடிசூட்டிக் கொண்டபின் ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் கனவு ராஜராஜசோழனுக்கு இருக்கிறது. அதற்கான