under review

ஹிலரிபெஸ்டீனா

From Tamil Wiki
Revision as of 06:42, 29 February 2024 by Tamizhkalai (talk | contribs)

ஹிலரிபெஸ்டீனா (பிறப்பு: ஜனவரி 25, 1988) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஹிலரிபெஸ்டீனா இலங்கை மன்னாரில் ஜனவரி 25, 1988-ல் சூசைநாயகம் (நாவன்னன்), டொலரோஸ் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயம், மன்னார் அல்-அஸ்ஹர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். ஹிலரிபெஸ்டீனா மஹகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் சிறப்புத் தேவையுடையோருக்கான டிப்ளோமாவை முடித்தார். World vision நிறுவனத்தில் சிறுவர்களுக்கான வளவாளராகப்(resource person) பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஹிலரிபெஸ்டீனா கவிதை, அரங்கக் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள் எழுதினார். 'விழுதுகள் தாங்கும் விருட்சங்கள் 'கவிதைத் தொகுப்பை 2006-ல் வெளியிட்டார். 'உயிரோடி' எனும் கவிதைத் தொகுப்பை 2017-ல் வெளியிட்டார். இவரின் படைப்புகள் அமுதநதி இதழில் வெளிவந்தன.

நூல் பட்டியல்

  • விழுதுகள் தாங்கும் விருட்சங்கள்
  • உயிரோடி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.