under review

ஈழநிலா

From Tamil Wiki
Revision as of 00:00, 14 February 2024 by Tamizhkalai (talk | contribs)
ஈழநிலா வெண்பா திரைப்பட வெளியீட்டு விழா

ஈழநிலா (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் களச்செயற்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழநிலா ஒரு திருநங்கை. பெண்ணியம், திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயல்பட்டும் வரும் ஒருவர்.

திரை வாழ்க்கை

ஈழநிலாவின் இயக்கத்தில் வெளிவந்த ’வெண்பா’ திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் பேசி பல தளங்களில் உரையாடல்களை நிகழ்த்தியது.

எழுத்து

ஈழநிலா திருநங்கையின் வாழ்க்கைப்பயணம் பற்றிய 'அரிக்கன் லாம்பு' என்ற நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • அரிக்கன் லாம்பு: ஒரு திருநங்கையின் வாழ்க்கைப்பயணம்

உசாத்துணை


✅Finalised Page