under review

தில்லைநாயகப் புலவர்

From Tamil Wiki
Revision as of 05:44, 12 November 2023 by Tamizhkalai (talk | contribs)

தில்லைநாயகப் புலவர் (தில்லைநாயக ஜோதிஷர்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

தில்லைநாயகப் புலவர் திருவானைக்காவிலுள்ள ஜம்புகேஸ்வரம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த அருந்தவநாதனுக்கு மகனாகப் பிறந்தார். சைவ சமயத்தவர். இவரின் ஞானாசிரியர் வேங்கடாச்சலசாமி. எண்ணும், எழுத்தும் கற்பித்த ஆசிரியர் அம்மையப்ப பூபாலர்.

தில்லைநாயகப் புலவர் தமிழிலும் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றார். கணிதத் துறையிலும் தேர்ச்சி பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தில்லைநாயகப் புலவர் வடமொழியிலிருந்த 'யோகமஞ்சரி' என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்குச் ஜாதக சிந்தாமணி எனப் பெயரிட்டார். இதில் இரண்டாயிரத்து நூற்றி நாற்பத்தியெட்டு (2148) பாடல்கள் உள்ளன. ஜாத சிந்தாமணி ஜோதிடர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் நூல். 'காலச்சக்கரம்' என்னும் நூலையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார்.

பாடல் நடை

  • ஜாதக சிந்தாமணி

நிலைகொண்ட மகமேரு வரையடுத்த காகமும்
பொன்னிறம் பெற்ருற்போல் அலைகொண்ட பாற்கடலைச் சார்ந்தநதி யெல்லாம்
பாலாகி ஞற்போற் கலைகொண்ட பெரியர்குழாத் தடைதலுங் கட்கடை
படுமக் காட்சியாலென் தலைகொண்ட புன்சொல்லு நன்சொல்லாப் பிறங்ககிற்கத்
தக்க தாமால்

தில்லைநாயகப் புலவர் பற்றிய பாடல்

நறைகமழ் கமலப் பொகுட்டில் வீற் றிருக்கு
நான்முகக் கடவுடான் படைத்த
நிறைவுள மாந்தர் வினைப்பய னதனா
னிலைபெறு யோகமஞ் சரியாம்
துறையென வழங்கும் வடமொழி யதனைத்
தூயசெந் தமிழினுற் செய்தான்
திறைகொடா வழுதிப் புகழ்தொண்டை நாடன்
றில்லைநா யகமகி பதியே

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page