under review

குருபாததாசர்

From Tamil Wiki
Revision as of 09:19, 13 August 2023 by Logamadevi (talk | contribs)

குருபாததாசர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர். குமாரசதகம் நூலின் ஆசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு

குருபாததாசர் பொ.யு. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தார். குருபாததாசரின் இயற்பெயர் முத்து மீனாட்சி கவிராயர் என்றும் மீனாட்சி கவிராயர் என்றும் அறிஞர்கள் கருதினர். வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

குருபாததாசர் திருப்பதியிலுள்ள திருப்புல்வயலில் பூசை செய்யப்பட்ட கந்தசுவாமிக்குத் துதியாக நூறு விருத்தங்கள் கொண்ட குமரேச சதகம் என்னும் பிரபந்த நூலை எழுதினார். குமரேச சதகம் சந்தமும் இசையும் பொருந்திய பாக்கள் கொண்டது. ஒவ்வொரு விருத்தத்தின் ஈற்றடியும் 'குமரேசனே' என்று முடியும்.

பாடல் நடை

  • குமாரசதகம்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலு மவர்களது
தூயநெறி தவறாகுமோ
மங்களகல் யாணகுற மங்கைசுர குஞ்சரியை
மருவுதிண் புயவரசனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு
மலைமேவு குமரேசனே

நூல்பட்டியல்

  • குமாரசதகம்

உசாத்துணை



✅Finalised Page