second review completed

இந்திரா செல்வநாயகம்

From Tamil Wiki
Revision as of 07:57, 23 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)

இந்திரா செல்வநாயகம் (பிறப்பு : ஏப்ரல் 8, 1968) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்திரா செல்வநாயகம் இலங்கை வவுனியா, செட்டிக்குளத்தில் செல்வநாயகம், கற்பகம் இணையருக்கு ஏப்ரல் 8, 1968-ல் பிறந்தார். வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப்பாடமாகப் பயின்று தனது இளங்கலைமானி பட்டத்தை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இந்திரா செல்வநாயகம் 2003-ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பல சஞ்சிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்( 2007), 'சீரிய சிந்தனைகள்' (2017), 'சமகால உளவியல்' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

நூல் பட்டியல்

  • வலிகாமம் தொடர்பான ஆய்வு நூல்
  • சீரிய சிந்தனைகள்
  • சமகால உளவியல்

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.