under review

சவுந்தரநாயகம்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:47, 15 August 2023 by Ramya (talk | contribs)

சவுந்தரநாயகம்பிள்ளை (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) ஈழத்து எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், ஆசிரியர், வழக்கறிஞர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சவுந்தரநாயகம் பிள்ளையின் இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பழைய வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் ஆசிரியரான கபிரியேல் திரேசாவின் மகனாகப் பிறந்தார். இவரது தாயார் யாழ்ப்பாணத்திலிருந்த ஒந்தாச்சியார் என்பவரின் மகள். வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்றார். 1858-இல் புகுமுக வகுப்பு தேர்ச்சி பெற்றார். சென்னைக்குச் சென்று 1867-இல் பி.ஏ.பி.எல் பட்டம் பெற்று சென்னையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னைப்பல்கலைக்கழகத்தில் சில காலம் ஆசிரியராக அரசால் நியமிக்கப்பட்டார்.

ஐந்து பிராமணர்கள், ராமலிங்கம்பிள்ளை மீது ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கில் டிசம்பர் 1869-இல் ஆறுமுக நாவலர் சார்பில் வாதாடியவர் சவுந்திரநாயகம் பிள்ளை.

இலக்கிய வாழ்க்கை

சவுந்தரநாயகம்பிள்ளை ஒரு ஆங்கிலப் பத்திரிகையை சில காலம் வரை நடத்தினார். நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம், மெய்ஞ்ஞானக் கீர்த்தனை ஆகிய நூல்களை இயற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதினார்.

மறைவு

சவுந்தரநாயகம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு 1882-இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நன்னூற் சுருக்கம்
  • தெலுங்கு இலக்கணம்
  • மெய்ஞ்ஞானக் கீர்த்தனை

உசாத்துணை


✅Finalised Page