எம்.சி.மதுரைப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 22:18, 16 March 2022 by Jeyamohan (talk | contribs)
மதுரைப் பிள்ளை

எம்.சி.மதுரைப்பிள்ளை (1880ல் - 1935 ) தொடக்க கால தலித் இயக்கங்களின் புரலவலர். நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.

பார்க்க பி.எம்.மதுரைப் பிள்ளை

பிறப்பு, கல்வி

எம்.சி.மதுரைப்பிள்ளை 1880 ஆம் ஆண்டு எம்.சி. மதுரைப்பிள்ளை பிறந்தார்.

வைணவப் பணிகள்

மதுரை பிள்ளை 1899 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஏகாதசி நாளில் ரங்கநாதரை வணங்க ஸ்ரீரங்கம் சென்றபோது அருள்மாரி திருவேங்கட வரயோகி சுவாமிகள் என்கிற வைணவ அடியாரின் உரைகளைச் சில நாட்கள் தங்கிக் கேட்டார். அவரைத் தன்னுடைய குருவாக அடைய எண்ணினார். ஆனால் அதற்கு வரயோகி சுவாமிகளின் அடியார்கள் அனுமதி மறுக்கவே உண்ணாவிரதம் இருக்க முற்பட்டார்.அதனை அறிந்த வரயோகி சுவாமிகள் மதுரை பிள்ளைக்கு ‘மதுரகவி ராமாநுஜ தாசர்’ என்ற பெயரைச் சூட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடும்படிச் செய்தார். பிறகு மதுரை பிள்ளை, சுவாமிகளைத் கோலார் வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்; அவரும் வர ஒப்புக்கொண்டார்.

எம்.சி. மதுரை பிள்ளை தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் 1900ஆம் ஆண்டு ஸ்ரீ நம்பெருமாள் சன்னிதியைக் கட்டத் தொடங்கினார். பஜனைக் கூடம், மலர்வனம், கிணறு, வைணவத் துறவிகள் தங்கும் மடம் போன்றவை அதில் அமைந்தன. சொற்பொழிவுகள், விவாதங்கள் நடந்தன; இலவச உணவு அங்கு வழங்கப்பட்டது. 1905ஆம் ஆண்டு சன்னிதி முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஸ்ரீநம்பெருமாள் என்ற பெயரில் பள்ளியொன்றை நிறுவினார் மதுரை பிள்ளை. அங்கிருந்த தலித் குழந்தைகள் இலவசமாகக் கல்வி பெறவேண்டுமென்பது இதன் நோக்கம். தேவநேசன் என்பவரை முதல் தலைமை ஆசிரியராகக் கொண்டு முப்பது மாணவர்களுடன் இப்பள்ளி தொடங்கியது. பிறகு அது 1924ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1926ஆம் ஆண்டில் 320 மாணவர்களையும் ஒன்பது ஆசிரியர்களையும் கொண்டு இயங்கியது. ஸ்ரீபெரும்புதூரில் இராமாநுஜ கூடம் ஒன்றையும் கட்டினார் மதுரை பிள்ளை.

பணிகள்

தலித் மக்களுக்காகத் தேனாம்பேட்டையில் கல்விச் சாலை நடத்திவந்த ரெவரன்ட் ஜான் ரத்தினம் செய்துவந்த பணிகளுக்கு நிதியளித்தார்.ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் முதன்மை நிதிக்கொடையாளராக மதுரைப் பிள்ளை திகழ்ந்தார். அதில் முக்கியத் தொண்டர்களாக இருந்த புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் பத்தர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். 1919 ஆம் ஆண்டு தங்கவயலில் ஸ்ரீநம்பெருமாள் பள்ளியை நிறுவினார். 1921இல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தின் விளைவாக உருவான புளியந்தோப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்தார்.

சென்னை நகராட்சியாகயின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைதாப்பேட்டை தாலுகா போர்டு அங்கத்தினரான மதுரைப்பிள்ளை, நாளடைவில் செங்கல்பட்டு ஜில்லா போர்டு உறுப்பினராகவும், கல்வித் துறை உறுப்பினராகவும் ஆனார். சென்னை நகர கவுரவ மாஜிஸ்டிரேட் பதவியை வகித்தார். அவருக்கு ஆங்கில அரசு அளிக்கும் ‘ராவ்சாகேப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1925இல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். சைமன் கமிஷனுக்கு சாட்சியமளித்த மதுரைப்பிள்ளை 1932 ல் வட்டமேசை மாநாட்டிற்கு ரெட்டமலை சீனிவாசன் சென்றபோது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்

மறைவு

1935ல் மறைந்தார்

உசாத்துணை