வித்யா விஹாரிணி

From Tamil Wiki
Revision as of 23:01, 24 January 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வித்யா விஹாரிணி (1909) கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்த பொது வாசிப்புக்குரிய இதழ். இதன் ஆசிரியர் சி.என். கிருஷ்ணசாமி அய்யர்.

பிரசுரம், வெளியீடு

வித்யா விஹாரிணி இதழ், கோவையிலிருந்து வெளிவந்தது. செப்டம்பர் 1909-ல், சி.என். கிருஷ்ணசாமி அய்யர் வித்யா விஹாரிணி இதழைத் தொடங்கினார். மொழி, வரலாறு, நூல் விமர்சனம், புத்தகக் குறிப்புகள், உலகச் செய்திகள் போன்றவை வித்யா விஹாரிணியில் இடம் பெற்றன.

40 பக்கங்களுடன் வெளிவந்த இந்த இதழின் ஆண்டுச்சந்தா ரூபாய் ஐந்து.