under review

கோட்டை அமீர் விருது

From Tamil Wiki
Revision as of 09:25, 27 December 2023 by Tamizhkalai (talk | contribs)

தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று கோட்டை அமீர் விருது.  தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கோட்டை அமீர் விருது

தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அவர் ஆற்றிய சீரிய பணிக்காக ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் முதலமைச்சரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது' வழங்கப்படுகிறது.

மதநல்லிணக்கத்திற்காகப் போராடி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ‘கோட்டை அமீர்’ அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. விருது, பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.25,000/- கொண்டது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்படுகிறது.

கோட்டை அமீர் விருது பெற்றோர்

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2012 டாக்டர். ஜே. இராஜா முகமது
2 2014 ஏ.ஆர்.பஷீர் அகமது
3 2015 துல்கருணை பாட்சா
4 2016 எம்.பி. அபுபக்கர்
5 2017 ஏ.எம். இக்ரம்
6 2018 ஐ. சாதிக் பாஷா
7 2021 கே.ஏ. அப்துல் ஜப்பார்
8 2022 ஜே முகமது ரஃபி
9 2023 எம்.ஏ.இனயத்துல்லா

உசாத்துணை


✅Finalised Page