under review

சகுந்தலை விலாசம்

From Tamil Wiki
Revision as of 22:48, 15 December 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சகுந்தலை விலாசம் (1845) சகுந்தலை – துஷ்யந்தன் வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர், இராயநல்லூர் ஸ்ரீ ராமச்சந்திரக் கவிராயர்.

பிரசுரம், வெளியீடு

சகுந்தலை விலாசம் நூல், 1845-ல், சென்னை, பாரதி அச்சுக்கூத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர், ராயநல்லூர் ஸ்ரீ ராமச்சந்திர கவிராயர். இதன் இரண்டாம் பதிப்பு, 1856-ல், கல்விப்பிரகாச அச்சுக்கூடம் மூலம் வெளிவந்தது. தொடர்ந்து சகலகலாநிலய அச்சுக்கூடம் (1881), பிரபாகர அச்சுக்கூடம் (1883), விவேகவிளக்க அச்சுக் கூடம் (1885), சகலகலாநிலய அச்சுக்கூடம் (1885) போன்ற அச்சுக் கூடங்கள் மூலம் பல பதிப்புகள் வெளிவந்தன. 1897, 1901, 1903 ஆண்டுகளில் ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம் மூலமும், ‘சகுந்தலை விலாசம்' நூலின் பல பதிப்புகள் வெளிவந்தன.

ஆசிரியர் குறிப்பு

சகுந்தலை விலாசம் நூலை இயற்றியவர், ராயநல்லூர் ஸ்ரீ ராமச்சந்திரக் கவிராயர். இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ராயநல்லூரில் பிறந்து, சென்னையில் வாழ்ந்தார். சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்த ஸ்ரீ ராமச்சந்திரக் கவிராயர், சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றினார். தாண்டவராய முதலியாருடன் இணைந்து, சென்னைக் கல்விச் சங்கத்திற்காகப் பல பதிப்புப் பணிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீ ராமச்சந்திரக் கவிராயர், தாருக விலாசம், ரங்கூன் சண்டை நாடகம், இரணிய வாசகப்பா, மகாபாரத விலாசம் போன்ற நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று, ’சகுந்தலை விலாசம்’. இந்நூல், ஜி. தேவரேஸ் என்பவரால், பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

மகாபாரதத்தில், ஆதி பருவத்தில் சிறு நிகழ்ச்சியாகக் குறிப்பிடப்படும் சகுந்தலை – துஷ்யந்தன் கதையின் இசை, நாடக வடிவமே, சகுந்தலை விலாசம்.

சகுந்தலை விலாசம், நாடகமாக நடிப்பதற்கேற்ற வகையில், பாடல்களுடன் இசை நாடக வடிவில் அமைந்துள்ளது. இந்நூலில் வெண்பா, கொச்சகக் கலிப்பா, விருத்தப்பா, அகவல் போன்ற யாப்பு வகைகள் பயின்று வந்துள்ளன. பாடல்களில், பேச்சு வழக்குச் சொற்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

காப்புச் செய்யுளுடன் ‘சகுந்தலை விலாசம்’ நூல் தொடங்குகிறது. தொடர்ந்து விநாயக வணக்கம், திருமால் தோத்திரம், குரு வணக்கம், அவையடக்க வணக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.