under review

இறவான்

From Tamil Wiki
Revision as of 20:19, 2 December 2023 by Tamizhkalai (talk | contribs)
இறவான்

இறவான் (2020 ) பா.ராகவன் எழுதிய நாவல். ஓர் இசைக்கலைஞனின் மனப்பிளவையும், அவனுடைய அலைக்கழிப்பையும் அதனூடாக அவன் அடையும் உச்சநிலைகளையும் சித்தரிக்கிறது

எழுத்து, வெளியீடு

இறவான் பா. ராகவன் 2020-ல் எழுதிய நாவல். கிழக்கு பதிப்பகம் இதை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

உளப்பிளவுச் சிக்கல் கொண்ட ஒருவனின் கதை என்னும் புனைவுப்பாவனை கொண்டது இந்நாவல். அவன் தன்னை ஹராரி என்னும் யூத இசைமேதையாக உணர்கிறான். அவன் மெய்யாகவே இசைமேதையா அல்லது அது அவனுடைய உளப்பிளவின் பாவனையா என்னும் மயக்கத்தினூடாக இந்நாவல் முன்னகர்கிறது. அவன் இசைக்கலைஞனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அகநிலை வழியாக அவன் சில எல்லைகளைக் கடந்து செல்கிறான் என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது.

இலக்கிய இடம்

இறவான் தமிழில் உளப்பிளவு நிலைக்கும் கலைக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் நாவலாகவும், கலையின் அதீதமனநிலைகளைச் சித்தரிக்கும் நாவலாகவும் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page