ஆ. பூவராகம் பிள்ளை
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்ல்காப்பியத்தைப் 1954-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
தனிவாழ்க்கை
சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கியப்பணி
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
விருதுகள்
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது
மறைவு
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
நூல்கள்
- சேனாவரையர் உரைவிளக்கம்
- திருவாய்மொழி விளக்கம்
- திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
- புலவர் பெருமை.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.