under review

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

From Tamil Wiki
Revision as of 19:31, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கம்பூரில் பிறந்தார். கிழான் என்பது சிறப்புப் பெயர். பொன் நாணயங்களை ஆராய்ந்து மதிப்பிடும் நாணயச்சோதனையாளர் பணியைச் செய்ததால் வண்ணத்துக்கன் முன்னொட்டாக வந்தது.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் 294-ஆவது பாடலாக உள்ளது. "விசும்பிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து வளி தோன்றியது." என்ற அறிவியல் உண்மை பாட்டில் உள்ளது.

பாடல் நடை

  • நற்றிணை: 294

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று- தோழி!- வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!

உசாத்துணை


✅Finalised Page