under review

குமரகுருபரர்

From Tamil Wiki
Revision as of 03:31, 1 November 2023 by Tamizhkalai (talk | contribs) (Replaced content with "thumb {{Read English|Name of target article=Kumaraguruparar|Title of target article=Kumaraguruparar}} குமரகுருபரர் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவி. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,...")
Swami-kumaragurubarar.jpg

To read the article in English: Kumaraguruparar. ‎


குமரகுருபரர் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவி. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை போன்ற நூல்களை இயற்றினார். காசி மடத்தை உருவாக்கினார்,

பிறப்பு, கல்வி

குமரகுருபரர் தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி இணையருக்குப் பிறந்தார். குமரகுருபரர் ஐந்து வயது வரை பேசும் திறனின்றி இருந்தார் என்றும் இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட்ட பிறகு பேசும் திறன் பெற்றார் என்றும் தொன்மம் கூறுகிறது. சிறு வயதிலேயே திருச்செந்தூர் முருகனைப் போற்றி கந்தர் கலிவெண்பா இயற்றினார்.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.