first review completed

சுந்தரக் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 19:54, 29 August 2023 by Tamizhkalai (talk | contribs)

சுந்தரக் கவிராயர் தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சைமன் காசிச்செட்டியின் நூலில் இடம்பெறாத சுந்தரக் கவிராயரை அ. சதாசிவம் பிள்ளை தனிப்பாடல் திரட்டின் உதவியுடன் சேர்த்துக் கொண்டார். வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல் திரட்டின் பழைய பதிப்புகளில் சுந்தரக் கவிராயரின் ஐந்து செய்யுள்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் முதற்பாடல் பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெற்றது. இவர் இயற்றியனவாக மேலும் இருபத்தொரு பாடல்கள் கா. சுப்பிரமணியபிள்ளை பதிப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இவை சுந்தரகவிராயரின் பாடல்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

பாடல் நடை

  • தனிப்பாடல்

ஒருகோட்டுக் கலைமுனியு மொளிதிகழும்
புலியாடை யுடுத்தகோவும்
மருமலர்வாழ் திசைமுகனும் வானவர்க
ணுயகனு மயிடன்ருனும்
கரியநிறத் திருமாலும் வாலியும்ப
ரரசனுமே காமனம்பாற்
பெருமையிழந் தனரென்றற் சிறுமனிதர்க்
கெப்படியோ பேசுங்காலே.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.