first review completed

நமிநாதர்

From Tamil Wiki
Revision as of 14:45, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
நமிநாதர்

நமிநாதர் சமண சமயத்தின் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரர்.

புராணம்

நமிநாதரை நமிபட்டாரகர் என்றும் அழைப்பர். இஷ்வாகு பரம்பரையில் மிதிலாவின் அரசர் விஜயாவிற்கும், அரசி வபராவிற்கும் மகனாகப் பிறந்தார். நமிநாதர் தாயின் வயிற்றில் இருந்தபோது மிதிலா நாட்டின் மீது பல அரசர்கள் போர் தொடுத்ததாகவும், நமிநாதர் தன் திறனால் அனைத்து அரசர்களையும் அடிப்பணிய வைத்தார் என்றும் சமணர்கள் நம்புகின்றனர்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: தங்க நிறம்
  • லாஞ்சனம்: நீலத்தாமரை
  • மரம்: வாகுல் மரம்
  • உயரம்: 15 வில் (45 மீட்டர்)
  • கை: 60 கைகள்
  • முக்தியின் போது வயது: 10000 வருடங்கள்
  • முதல் உணவு: வீரப்புர நகரின் மன்னர் தத்தா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 17 (சுப்ரபர்யா)
  • யட்சன்: வித்யுபிரப தேவ்
  • யட்சினி: சாமுண்டி தேவி

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.