under review

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

From Tamil Wiki
Revision as of 03:35, 25 August 2023 by Tamizhkalai (talk | contribs)

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (சில் + தாழிசை = சிஃறாழிசை) தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும், தரவை அடுத்தும் தாழிசைகளுக்கு இடையிலும் தனிச்சொல் பெற்றுவரும், மூன்று தாழிசைகள் வரும் போது, ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் பெற்று வரும் கலிப்பாக்கள், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

  • கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.
  • நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவைப் போல் தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும்.
  • தரவு, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், சரிதகம் என்னும் அமைப்பில் வரும்.
  • சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவுக்கு, தரவின் அடிச் சிற்றெல்லை மூன்றடி. தாழிசை, இரண்டு முதல் நான்கடி வரை வரும்.

உதாரணப் பாடல்

பரூஉத்தடக்கை மதயானைப்
பணையெருத்தின் மிசைத் தோன்றிக்,
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க்
குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் றோரினொடும்
பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான்
கூடலார் கோமானே


(தனிச்சொல்)

ஆங்கொருசார்


(தாழிசை)
உச்சியார்க் கிறைவனா யுலகெலாங் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார்
வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே.


(தனிச்சொல்)

ஆங்கொருசார்


(தாழிசை)

அக்கால மணிநிரைகாத் தருவரையாற 4பகைதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.


(தனிச்சொல்)

ஆங்கொருசார்


(தாழிசை)

மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்
வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே


(தனிச்சொல்)

அஃதான்று


(சுரிதகம்)

கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான்
நின்றபுக ழொருவன் செம்பூட் சேஎய்
என்றுநனி யறிந்தனர் பலரே தானும்
ஐவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே

- மேற்கண்ட பாடல், நான்கடித் தரவு, மூன்றடித் தாழிசை மூன்று, இடையிடையே தனிச்சொல், சுரிதகம் பெற்று வந்ததால், இது சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும்.

உசாத்துணை


✅Finalised Page