first review completed

முருகேச கவிராயர்

From Tamil Wiki
Revision as of 18:44, 5 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகேச கவிராயர் கர்னாடக இசைப் பாடல்கள் இயற்றியவர்.

இளமை

பனையஞ்சேரி என்ற ஊரில் கருணீக குலத்தில் பரசுராம பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.

இசைப்பணி

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ராமசந்திரத் தொண்டைமானிடம் அவைப்புலவராக இருந்தார். புல்வயல் என்ற ஊரில் முத்தையன் என்ற இயற்பெயர் கொண்ட பாலசன்னியாசியாகி ’உலகநாதசுவாமி’ எனப் பெயர் கொண்டு 1865-ல் சமாதியடைந்த ஒருவர் மீது பல பாடல்களும் இரு கீர்த்தனங்களும் எழுதினார். 1866-ல் இவை அச்சிடப்பட்டன.

ராகம்: சௌராஷ்டிரம்
பல்லவி:
மகிமையைக் கேளீர் - உலகநாதன்
மகிமையைக் கேளீர்
அனுபல்லவி:
மண் தலத்திலும் விண் தலத்திலும்
உண்டெனச் சொலக் கண்டதில்லை - யிந்த (மகிமையை)

வைணவ சமயப் பற்றுக் கொண்ட முருகேச கவிராயர், "தசாவதார் ஷட்குண நாம சங்கீர்த்தனம்" என்ற சிறுநூலையும் எழுதினார். இந்நூல் 1871-ல் அச்சானது. தசாவதாரத்தையும் திருமாலுக்குரிய ஆறு குணங்களையும்[1] சொல்லி, திருவரங்கநாதர் மீது பாடல் புனைந்திருக்கிறார்.

ராகம்: தோடி
பல்லவி:
கருணாநிதி - உன்றன்
சரணாகதி - என்றன்
கவலைதீர்த் தருள்வாயே

வழக்கமாக கீர்த்தனைகளில் மூன்றோ அதற்கு மேற்பட்ட சரணங்களோ இடம் பெறும். இப்பாடலில் பல்லவி மூன்று பகுதியும், அனுபல்லவி மூன்று பகுதியும், ஒவ்வொரு சரணத்தையும் மும்மூன்று பகுதிகளாகவும் எழுதியிருக்கிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. வாத்சல்யம், பவசோஷணம், மாஉதாரத்துவம், அபயப்பிரதானம், அட்சயபதம், ஆபத்கால சம்ரட்சணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.