under review

கோ.சாமிநாதன்

From Tamil Wiki
Revision as of 21:04, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
கோ.சாமிநாதன்

கோ.சாமிநாதன் (ஜனவரி 21, 1965) மலேசியக் கல்வியாளர், தமிழாசிரியர்

பிறப்பு, கல்வி

கோ.சாமிநாதன் ஜனவரி 21, 1965-ல் கெடா, கூலிம் பெலாம் தோட்டத்தில் கோவிந்தசாமி - கிருஷ்ணம்மா இணையயருக்கு பிறந்தவர். தொடக்கக் கல்வியை மூன்றாம் ஆண்டு வரை தமிழகத்தில் சேலம் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மோட்டுப்பட்டி பழைய கிராமத்தில் பயின்று,பின்னர் மலேசியா வந்து கூலிமில் உள்ள பெலம் தோட்டத்தமிழ்ப் பள்ளியில் 4-ஆம் ஆண்டிலிருந்து தனது பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். கூலிம் லாபு பெசார் பள்ளியில் படிவம் ஒன்று முதல் படிவம் மூன்று வரை படித்துள்ளார். பின்னர் பட்டவோர்த் பாகான் ஆஜாம் டத்தோ ஒன் இடைநிலைப்பள்ளியில் படிவம் நான்கு மற்றும் ஐந்தைத் தொடர்ந்தார். புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அடாபி தனியார் இடைநிலைப் பள்ளியில் தனது ஆறாம் படிவக் கல்வியை முடித்தார். 1987 முதல் 1989 வரை ஶ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்றார் சாமிநாதன்.மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் 1997-ல் முடித்தார்.

தனிவாழ்க்கை

கோ.சாமிநாதனின் மனைவி தமிழரசி. முகில்வர்ணன், புகழினி, தமிழினி, இன்னினி என நான்கு குழந்தைகள் சாமிநாதன் ஒன்றரை ஆண்டு காலம் தற்காலிக ஆசிரியராகப் பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ் பள்ளியில் பணியாற்றினார்.1990 முதல் 1993 வரை செபெராங் பிரை கெப்பாலா பத்தாஸ் தமிழ் பள்ளியில் பணியாற்றினார். பின்னர் இடைநிலைப் பள்ளி ஆசிரியரானார். துவான்கு பைனூன் ஆரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளரானார்.

கல்விப்பணி

2002 முதல் பணியாற்றிவரும் சாமிநாதன் 2011 முதல் 2019 வரை தமிழ்ப்பிரிவு தலைவராகவும் பின்னர் 2020 முதல் 2022 வரை தமிழ் துறை தலைவராகவும் பதவி வகித்தார். மலேசியாவில் தமிழிலக்கிய வாசிப்பை பெருக்குவதற்கு பங்களிப்பாற்றி வருகிறார்

உசாத்துணை

[[]] ‎


✅Finalised Page