under review

காவற்பெண்டு

From Tamil Wiki
Revision as of 14:39, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

காவற்பெண்டு செவிலித்தாயைக் குறிக்கும் சொல். இவர் சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் என அறிஞர்கள் கருதுகின்றனர். சில ஏடுகளில் இவர் பெயர் காதற்பெண்டு என்றும் உள்ளது. பாடலின் வழி இவர் மறக்குடியில் பிறந்த பெண் என ஊகிக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

காவற்பெண்டு இயற்றிய பாடல் புறநானூற்றில் 86-வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப்பாடல். போர் வீரனின் மறத்தை புலப்படுத்தும் பாடல்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • மகனைப் பெற்றெடுத்த வயிற்றை புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல என்கிறாள் அன்னை
  • வீட்டிலிருந்து வெளியேறிய போர்வீரனைப் பெற்ற அன்னையின் செறுக்கு வெளிப்படும் பாடல். அவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாது ஆனால் போர்க்களத்தில் வெளிப்படுவான் என உறுதியாகக் கூறும் அன்னையின் மறத்தையும் மகனின் மறத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாடல்

பாடல் நடை

  • புறநானூறு: 86 (திணை: வாகை) (துறை: ஏறாண் முல்லை)

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

உசாத்துணை


✅Finalised Page