first review completed

வேதா இலங்காதிலகம்

From Tamil Wiki
Revision as of 20:58, 27 April 2023 by Tamizhkalai (talk | contribs)
வேதா இலங்காதிலகம்

வேதா இலங்காதிலகம் (பிறப்பு: ஏப்ரல் 3, 1947) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

வேதா இலங்காதிலகம் இலங்கை கோப்பாயில் நகுலேசுவரர், சிவக்கொழுந்து இணையருக்கு ஏப்ரல் 3, 1947-ல் மகளாகப் பிறந்தார். டேனிஷ் மொழியில் குழந்தைகள் பராமரிப்பு (நர்சரி) பற்றிய கல்வியை மூன்று வருடங்கள் படித்து ‘பெட்டகோ’ எனும் தகுதியை 1993-ல் பெற்றார்.

தனிவாழ்க்கை

வேதா இலங்காதிலகம் கனகரட்னம் இலங்காதிலகம் என்பவரை மணந்தார். பிள்ளைகள் ஒரு மகன், ஒரு மகள். நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஒரு வருடம் வேலை செய்தார். 1987-ல் கணவருடன் புலம்பெயெர்ந்து டென்மார்க் நாட்டிற்குச் சென்றார். பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருணமாகி ஹொரண நகரப் பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தார். டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் பணிபுரிந்தார். 3 முதல் 12 வயது டேனிஷ், தமிழ்ப் பிள்ளைகளுடன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தார்.

ரி.ஆர்.ரி தமிழ் அலை ஐரோப்பிய வலத்தில் இரண்டேகால் வருடங்கள் டென்மார்க் செய்திகளும், லண்டன் தமிழ் வானொலியில் தகவல் சாலையில் இரண்டு வருடங்கள் டென்மார்க் செய்திகளும் வாசித்தார்.

இலக்கிய வாழ்க்கை

1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதினார். சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள் மற்றும் 'முத்துக்கமலம்' போன்ற தமிழ் இணைய இதழ்களில் எழுதினார். லண்டன் சஞ்சிகைகளில் எழுதினார்.

2002-ல் ‘வேதாவின் கவிதைகள்’ என்ற கவிதை நூல் வெளிவந்தது. 2004-ல் ‘குழந்தைகள் இளையோர் சிறக்க’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நூல் வெளிவந்தது. 2007-ல் ‘உணர்வுப் பூக்கள் எனும் கவிதை நூலை கணவருடன் இணைந்து வெளியொட்டார். வானொலி, தொலைக்காட்சிகளில் விமர்சனம், கவிதை, அனுபவக் கட்டுரைகள் எழுதி வாசித்தார்.

விருது

  • ஆறுமுகநாவலர் விருது

நூல்கள் பட்டியல்

கவிதைகள்
  • வேதாவின் கவிதைகள் (2003)
  • உணர்வுப் பூக்கள் வாழ்வியல் கவிதைகள் (2007)
பிற
  • குறள் தாழிசை (2018)
  • குழந்தைகள் இளையோர் சிறக்க (மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்; 2004)
  • சான்றிதழ்க் கவியதிகாரம் - 1
  • பெற்றோரியலில் சிற்றலைகள் (2018)
  • மனக்கடல் வலம்புரிகள்

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.