first review completed

பெண்மொழி

From Tamil Wiki
Revision as of 21:13, 17 January 2023 by Tamizhkalai (talk | contribs)
பெண்மொழி

பெண்மொழி (இதழ்) (2022) லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு சார்பில் வெளிவரும் பெண்களுக்கான இதழ்.

வெளியீடு

பெண்மொழி லண்டன் தமிழ்ப்பெண்கள் அமைப்பு(London Tamil Women Organisation) சார்பில் வெளிவரும் இதழ். ”ஓங்கின கைகள், உயர்ந்தன கைகள், ஒப்பில்லாத தேடலில் உயர்ந்தன கைகள்” என்ற வாசகத்தைத் தாங்கி வெளிவரும் இதழ். முதழ் இதழ் மார்ச் 2022-ல் வெளியானது.

நோக்கம்

பெண்மொழி இதழ் அதன் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி

  • லண்டனில் வசிக்கிற அல்லது வேலை செய்கின்ற தமிழ்ப்பெண்களை ஒருங்கிணைத்து பயணிப்பது,
  • ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, அவர்களை சமூக ஒருங்கிணைப்பு சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுத்துவது
  • அமைப்பாக இருந்து உதவி தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது

ஆகியவற்றைத் தன் நோக்கமாகக் கொண்டது.

உள்ளடக்கம்

பெண்மொழி இதழ் கவிதைகள், பெண்களுக்கான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள், பெண்களுக்கு எதிரான போக்குகள் பற்றிய எளிய கண்டனங்களை உள்ளடக்கியது.

ஆவணம்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.