under review

டபிள்யூ.டி.எம்.க்ளூஸ்

From Tamil Wiki
Revision as of 13:34, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
க்ளூஸ் மனைவி எட்னாவுடன்

டபிள்யூ.டி.எம். க்ளூஸ் (W.T. M Clewes) (அக்டோபர் 17, 1891 - மே 30, 1984) தமிழகத்தில் ஈரோடு பகுதியில் கல்விப்பணியும் மதப்பணியும் ஆற்றிய லண்டன்மிஷன் போதகர்.

தனிவாழ்க்கை

வில்லியம் தாமஸ் மோரிஸ் க்ளூஸ் (Willam Thomas Morris Clewes) அக்டோபர் 17, 1891-ல் இங்கிலாந்தில் லைய்யி என்ற இடத்தில் பிறந்தார். இவர் மனைவி எட்னா ஜோன் பேக்கர் (Edna Jane Baker)

பணிகள்

க்ளுஸ் 1923-ஆம் ஆண்டு ஈரோடு வந்தார் இவருடன் மனைவியும் வந்தார். எச்.ஏ.பாப்லி மற்றும் ஏ.டபிள்யூ.பிரப் ஆகியோருடன் இணைந்து ஈரோடு வட்டாரத்தில் பள்ளிகளை தொடங்கினார். ஈரோடு சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு பகுதி 'Clewes Block’ என்று அழைக்கப்படுகிறது.

பிரப் தொடங்கிய மருத்துவமனையை (பின்னர் ஈரோடு சி.எஸ்.ஐ மருத்துவமனை) 1923-ஆம் ஆண்டு விரிவாக்கி மகப்பேறுப் பகுதியை சேர்த்தார். குளுஸ் 26 ஆண்டுகள் (1923 - 1949) ஈரோடில் பணியாற்றினார். 1946-ஆம் ஆண்டு புங்கம்பாடி கிராமத்தில் குட் சமரிட்டன் ஆலயம் இவருடைய பங்களிப்பால் கட்டப்பட்டு டிசம்பர் 25, 1946-ல் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது.

மறைவு

க்ளூஸ் மே 30, 1984-ல் மறைந்தார்.

பங்களிப்பு

கொங்குவட்டாரத்தின் தொடக்ககாலக் கல்வி பரவலில் க்ளூஸ் தம்பதிகள் பெரும் பங்களிப்பாற்றியிருக்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page