under review

சீதளநாதர்

From Tamil Wiki
Revision as of 19:49, 17 March 2023 by Logamadevi (talk | contribs)
சீதளநாதர்

சீதளநாதர் சமண சமயத்தின் பத்தாவது தீர்த்தங்கரர்.

புராணம்

சமண சமய சாத்திரங்களின் படி, இக்சவாகு குல மன்னர் திருதராதருக்கும், ராணி சுனந்தாவிற்கும் அயோத்தியில் பிறந்தார். சமண நம்பிக்கைகளின்படி கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த சீலராக விளங்கியவர். சீதளநாதர் 100,000 பூர்வ வருடங்கள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: தங்க நிறம்
  • லாஞ்சனம்: கற்பக மரம்
  • மரம்: பிலுரிகா மரம்
  • உயரம்: 90 வில் (270 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 100000 பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: மன்னர் பத்மா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 81 (அங்கர்)
  • யட்சன்: பிரம்ம தேவர்
  • யட்சினி: மானவி தேவி

கோயில்கள்

மேற்கு வங்காள மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் பக்பீரா (PAKBIRRA) எனுமிடத்தில் பண்டைய மூன்று சமணக் கோயில்களில், சீதளநாதர், ரிசபநாதர், சம்பவநாதர், பத்மபிரபா, சந்திரபிரபா, சாந்திநாதர், பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் போன்ற எட்டு தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் உள்ளது.

  • கல் பசாதி, மூட்பித்ரி (கர்நாடக)
  • ஷீதலநாதர் கோவில், மதுபன், கிரிடிஹ் (ஜார்கண்ட்)
  • ஷீதலநாதர் கோவில், கொல்கத்தா

உசாத்துணை


✅Finalised Page