under review

சி.வை. சின்னப்பபிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:27, 11 March 2023 by Logamadevi (talk | contribs)

சி.வை. சின்னப்பபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. இலங்கையின் கல்வி சீர்திருத்தத்தில் முக்கியப் பங்காற்றினார். இலங்கையில் நாவல் இலக்கியம் முழுமை பெற பங்காற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சி.வை. சின்னப்பபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில்பிறந்தார். பெற்றோர்கள் கிங்ஸ்பரி வைரவநாதன், மேரி டேட்டன் பெருந்தேவி. சி.வை. தாமோதரம் பிள்ளை இவரின் அண்ணன். இந்தியாவிலே உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றினார். ஓய்வுக்குப்பின் இலங்கைக்கு வந்து கல்வி விருத்திக்கான தொண்டுகள் பல செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலங்கையில் நாவல் இலக்கியம் நிறைவான உருவம் பெறும் வகையில் பல நாவல்களை முதன் முதலாக எழுதினார். வீரசிங்கன் கதை, இரத்தின பவானி, விஜயசீலம்(1916) ஆகிய நாவல்களை எழுதினார். விஜயசீலம் ஈழநாட்டின் வரலாற்றுடன் தொடர்புடைய விஜயனின் கதை.

நூல் பட்டியல்

  • வீரசிங்கன் கதை
  • இரத்தின பவானி
  • விஜயசீலம்

உசாத்துணை


✅Finalised Page