under review

கோயில் நான்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 13:33, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

கோயில் நான்மணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

இது சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயிலின் நடராசப் பெருமான் துதியாக பாடப்பட்ட நூல். சிதம்பரம் கோயில் பொதுவாகக் கோயில் என்று வழங்கப்படுவதால் "கோயில் நான்மணிமாலை" என இந்நூல் வழங்கப்படுகிறது. நான்மணிமாலையின் இலக்கணத்துக்கு அமைய இந்நூல், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்கு பாவகைகளில் மாறி மாறி வரும் 40 பாடல்களைக் கொண்டு அந்தாதியாக அமைந்துள்ளது. இந்த இலக்கிய வகையில் அமைந்த முதல் நூல் . இதனை இயற்றியவர் பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள். பட்டினத்தடிகள் பாடிய ஐந்து நூல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. திருமுறை ஆசிரியராகிய இவரும், துறவறத்தைப் பெரிதும் வலியுறுத்தியும் பெண்களைப் பழித்தும் பாடிய பட்டினத்தாரும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நூலின் இறுதிப் பாடல் 53 அடிகளில் இறைவனைப் போற்றி, போற்றி என்று துதிக்கிறது. இந்நூலில் 11 பாடல்கள் அகத்துறையில் உள்ளன. இறைவனை 'நாயனார்' என்கிறார்.

கருப்பொருட்கள்

  • சிவனின் பெருமைகள்
  • அவர்தம் ஆடல்
  • அகப்பொருள்
  • தத்துவப் பொருள்

பாடல் நடை

திருச்சிற்றம்பலம்

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

கட்டளைக் கலித்துறை

குடை கொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத

உசாத்துணை


✅Finalised Page