being created

பிரளயன்

From Tamil Wiki

பிரளயன்( இயற்பெயர் :சந்திரசேகரன்; பிறப்பு:1960) தமிழ்நாட்டின் நவீன நாடக ஆளுமை, பத்திரிகையாளர், திரைப்பட இயக்குனர். நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என நாடகத்துறைக்குப் பல வகைகளில் பங்காற்றுபவர். வீதி நாடகம் என்னும் வடிவத்தின் சாத்தியங்களை முயன்றவர்.

பிறப்பு, கல்வி

பிரளயன் திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம்-கல்யாணசுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர். உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரர் சண்முக அருணாச்சலம், மூன்று சகோதரிகள்.

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியையும், கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.கல்லூரியில் படித்தபோது தமிழ்மொழிக் கழகம் வாயிலாக நாடகங்களில் நடித்தார். வானவில் பிலிம் சொசைட்டி மூலம் கலை தொடர்பான நடவடிக்கைகளைத் துவங்கியபோது, கல்லூரி ஆசிரியர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச படங்களைப் பார்த்து அவற்றை விமர்சனம் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

தனி வாழ்க்கை

1981-ல் கணிதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, சென்னையில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு இளநிலை பயிற்சியாளராக வேலையில் அமர்ந்தார்.

பிரளயன் மணமானவர். மனைவி ரேவதி, மகன் சிபி.

பயணம் நாடகத்தில் பிரளயன் thehindu.com

கலை வாழ்க்கை

பிரளயன் 1977-ல் பேராசிரியர் சே. ராமானுஜம் மூலம் பன்சி கௌல் நடத்திய 70 நாள் நாடகப் பயிலரங்கு, 1979-ல் தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடக விழா. 1980-ல் பாதல் சர்க்கார் சென்னையில் சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பயிலரங்கு போன்றவற்றில் கலந்து கொண்டார்.

நவீன நாடக வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, 1980-களில் சென்னைக் கலைக் குழுவைத் துவக்கினார். அதிகார வர்க்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளையும் எதிர்த்த நாடகங்களை அரங்கேற்றினார். சென்னைக் கலைக்குழுவின் முதல் நாடகம் 'நாங்கள் வருகிறோம்' கருத்து வெளிப்பாடு என்பதையே குற்றச் செயலாகப் பார்க்கும் அரசின் அணுகுமுறையைப் பேசியது.

மக்களாட்சியின் கலாசார வெளிப்பாடாக நவீன வீதி நாடகங்களைக் கண்டார். 'பெண்' வீதி நாடகத்தை நோக்கிய அவரது முதல் முயற்சி. என்று ‘பெண்’ நாடகத்தைச் சொல்லலாம். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் தொடர்பினால் தெருவில் திறந்த வெளியில் நாடகம் நிகழ்த்துவதைப் பற்ரிய அறிமுகம் கிடைத்தது. பாதல் சர்க்காரால் தாக்கம் பெற்ற ஜோஸ் சிரமுல் தயாரித்த நாடகங்களை நாங்கள் அப்படியே தமிழில் மொழியாக்கி இயக்கினார். சாதத் ஹசன் மன்ட்டோ எழுதிய ‘டோபா டேக்சிங்’ கதையை 2017-ல் வீதி நாடகமாக உருவாக்கினார். ஸ்ரீநகரில் இடைத்தேர்தல் நடந்த சமயத்தில், ஒரு இளைஞனை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி 2017 ஏப்ரலில் ஜீப்பில் கட்டிக்கொண்டுபோன செய்தி பெரிய சர்ச்சையானது. அந்தச் செய்தியைத் தொடர்ந்தபோது ஒரு நாடகமாய் செய்வதற்கான சாத்தியம் தெரிந்தது.

1980-களில் மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகக் காவல் துறை அத்துமீறல்கள் நிறைய நடந்துகொண்டிருந்த நேரம். நாடகக் குழுக்கள், நாடகக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டன. ௵த்து நாங்கள் போட்ட நாடகம்தான் ‘நாங்கள் வருகிறோம்’.

முற்றுப்புள்ளி காவல் துறைக்கு ஆள் எடுக்கும்போது, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலில் மனோகரன் என்ற இளைஞர் மிதிபட்டு இறந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் எழுதிய நீண்ட கவிதையை 'முற்றுப்புள்ளி' என்ற நாடகமாக ஆக்கினார். நாடு முழுவதும் அந்த நாடகம் சென்று வெற்றிபெற்றது.

அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி


12 – 16 வயது வரையிலான வளரிளம் பருவத்து மாணவர்களுக்காக 25 வருடங்களாகக் பயிலரங்குகள் நடத்தி வருகிறார்.


விருதுகள்

புதுவை களம் நாடக இயக்கம் வழங்கிய 'நாடகச்சிற்பி' விருது 2006.

Wisdom Magazine வழங்கிய சிறந்த நாடகாசிரியர் விருது 2007.

News 7 வழங்கிய நாடக ரத்னா விருது 2019iN

மதிப்பிடு

அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும், அச்செயற்பாட்டிற்காக மாநிலமுழுதும் பல பயிலரங்குகள் நடத்தி பல நாடகக் குழுக்களை உருவாக்குவதிலும் இவரது பங்கு மிகவும் கணிசமானது.

முரண்பாடு என்பது அரசுக்கோ அதிகாரத்துக்கோ எதிரான செயல்பாடு மட்டுமல்ல; மக்களின் பொதுப்புத்தியிலிருந்தும் முரண்பட வேண்டியிருக்கிறது. பெருஞ்சமூகம் பெண்ணுக்கு எதிராக வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சுட்டிக்காட்டுவதும் அவர்களிடமிருந்து முரண்படுவதுதானே? அந்த மாதிரியான சூழலில் அரசுடன் சேர்ந்தே பொது சமூகத்துடன் முரண்படலாம்.

படைப்புகள்

  • கல்வியில் நாடகம் -  பாரதி புத்தகாலயம்
  • வஞ்சியர் காண்டம் - சந்தியா பதிப்பகம்
  • இலக்கம் 4 பிச்சை பிள்ளை தெருவில் இருந்து - வாசல் பதிப்பகம்
  • பாரி படுகளம் நாடகம்  சந்தியா பதிப்பகம்
  • நவீன மத்தவிலாசப் பிரஹசனம்- சந்தியா பதிப்பகம் (அச்சிலுள்ளது)
  • உபகதை - நாடகம்மருதா பதிப்பகம்
  • சப்தர் ஹாஷ்மியின் நாடகக் கலை பற்றிய கட்டுரைகள் (மொழிபெயர்ப்பு) - சென்னை புக்ஸ் வெளியீடு. தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.
  • காப்புரிமை கொத்தவால் (மொழிபெயர்ப்பு) - இந்தியா தியேட்டர் பாரம் வெளியீடு.
  • சந்தேகி (கவிதைத் தொகுப்பு) சென்னை புக்ஸ் வெளியீடு.

உசாத்துணை

பிரளயன் நேர்காணல்-யாழ்.காம்

பிரளயன் நேர்காணல்-தமிழ்ஹிந்து உரையாடல்-ஷங்கர்ராமசுப்ரமணியன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.