being created

குருவிக்கரம்பை வேலு

From Tamil Wiki
Revision as of 00:09, 27 May 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குருவிக்கரம்பை சு. வேலு

சு. வேலு (சுப்பையாத் தேவர் வேலு; குருவிக்கரம்பை வேலு; குருவிக்கரம்பை சு. வேலு) (நவம்பர் 26, 1930 - மார்ச் 3, 2010) திராவிட இயக்க எழுத்தாளர். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். திராவிட இயக்கம் சார்ந்து பல நூல்களை, கட்டுரைகளை எழுதினார். குத்தூசி குருசாமியுடன் இணைந்து செயல்பட்டார். குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாறு உள்பட பல நூல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

சு.வேலு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில், நவம்பர் 26, 1930 அன்று, சுப்பையாத் தேவர்-சௌபாக்கியத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். பட்டுக்கோட்டை ராசா மடத்தில் உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (இன்டர்மீடியட்) கற்றார்.

தனி வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.