சீயமங்கலம் குடைவரைக்கோயில்

From Tamil Wiki
Revision as of 18:16, 11 February 2022 by Jeyamohan (talk | contribs)

சீயமங்கலம் குடைவரை (பொயு 7-8 ஆம் நூற்றாண்டு) இது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள குடைவரை கோயில். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கியது.அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்று இதன் பழைய பெயர். இதன் அருகே சீயமங்கலம் ஜினப்பள்ளி அமைந்துள்ளது.

இடம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் உள்ளது.பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணுவின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மவிஷ்ணு சதுர்வேதிமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாக வைக்கப்பட்ட சிம்மமங்கலம் சீயமங்கலமாக மருவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1191

https://patrikai.com/details-of-seeyamangalam-cave-temple/#

சீயமங்கலம்- ரமேஷ்/