being created

சதுரகராதி

From Tamil Wiki
Revision as of 19:49, 31 January 2023 by Tamizhkalai (talk | contribs)

சதுரகராதி வீரமாமுனிவரால் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி. 18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு 1824-ல் முழுமையாய் அச்சில் வந்தது. இதன் அகராதிக்குக் பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . பின்னாட்களில் தொகுக்கப்பட்ட தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதி.

ஆசிரியர்

சதுரகராதியைத் தொகுத்தவர் வீரமாமுனிவர்.


நூல் அமைப்பு

சதுரகராதி -நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி .

பெயரகராதி . இதில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன

பொருளகராதி . இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரநிரலில் வைத்து அவ்வப் பொருட்கு உரிய பல பெயர்களும் அகரநிரலில் சுட்டப்பட்டுள்ளன

தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரநிரலில் அமையக் காணலாம் .

தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்களை அகரநிரலில் தருகின்றார் . இதில் குறிற்கீழெதுகை , நெடிற்கீழெதுகை என இருபகுதி உண்டு . இவற்றில் படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல் என்றாற்போலவும் ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை என்றாற்போலவும் சொற்களை அமைத்துப் பொருளும் சுட்டியுள்ளார் . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கிய பான்மையில் உள்ளது .

சிறப்புகள்

அறிவியல் சொற்கள்

வானிலை

–ராசி 12, மண்டலம் 3, 7, மாதங்கள் 12, அவற்றிற்குரிய நட்சத்திரங்கள்,  

 கிரகங்கள்

மருத்துவம் – உயிர் வேதனை 12, மூலம் 10 (சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம்)

கணிதம்

சங்கலிதம் - கூட்டல்

விபகலிதம் - கழித்தல்

குணனம் - பெருக்கல்

பாகாரம் - பங்கிடல்

வர்க்கம் – சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம் ( square)

வர்க்கமூலம் – அவ்வர்க்கத் தொகையினின்ற தன்மூலமாகிய  வரம்பறிதல்

கனம் - சமமாகிய மூவெண்ணின் பெருக்கம் (குழியைச் சமமாகப் பன்னிரு கோணப்படுத்துதல்

கனமூலம் - அக்கனத் தொகையினின்ற தன்மூலமாகிய ஒரு மூலையறிதல்

இசை – பண் - 4, இசை - 3,7, ராகத்தகுதி, 32 வகை ராகம், பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடப்படக்கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப்பெயர்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.