being created

குழ. கதிரேசன்

From Tamil Wiki
Revision as of 20:34, 26 January 2023 by ASN (talk | contribs) (Para Added)
குழ. கதிரேசன்

குழ. கதிரேசன் (குழந்தையன் கதிரேசன்) (அக்டோபர் 17, 1949) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி. சிறார் பாட நூல்கள் ஆசிரியர். சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். ஐந்திணை பதிப்பகத்தை நிறுவி இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

குழ. கதிரேசன், புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில், அக்டோபர் 17, 1949 அன்று, குழந்தையன் - விசாலாட்சி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்க்கல்வியை ராயவரத்தில் உள்ள காந்தி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். புதுமுகக் கல்வியை மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் படித்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

குழ. கதிரேசன் சில காலம் மாவு அரைக்கும் மில்லில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். துணிக் கடை ஒன்றில் கணக்குப் பிள்ளையாகப் பணிபுரிந்தார். பின்னர் பதிப்புத் தொழிலை மேற்கொண்டார். மனைவி நாச்சம்மை. மகள்கள் நாகம்மை. விசாலாட்சி.

இலக்கிய வாழ்க்கை

குழ. கதிரேசன் பள்ளிக் காலம் முதலே எழுதினார். இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள் கோகுலம் இதழில் வெளியாகின. தொடர்ந்து பல சிறார் இதழ்களுக்கு எழுதினார். கதைகளை விட குழந்தை இலக்கியப் பாடல்களிலேயே இவரது கவனம் சென்றது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அழ. வள்ளியப்பா ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டு எளிய தமிழில் குழந்தைகளுக்கான பாடல்களை எழுதினார். அழ. வள்ளியப்பா இவரை ஊக்குவித்தார். சென்னையில் மாதமொருமுறை நடக்கும் கடற்கரைக் கவியரங்குகளில் கலந்துகொண்டு பல பாடல்களை அரங்கேற்றினார் கதிரேசன். பெரியவர்களுக்கான பாடல்கள் சிலவற்றையும் எழுதினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார் குழ. கதிரேசன். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகியுள்ளன. இவரது பாடல்கள் தமிழக அரசின் சிறார்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. கேரளா, மைசூர், சிங்கப்பூர் தமிழ் வகுப்புப் பாட நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றன. ஆய்வு மாணவர்கள் பலர் குழ, கதிரேசனின் படைப்புகளை ஆய்வு செய்து இள முனைவர், முனைவர் பட்டம் பெற்றனர்.

ஒலிப் பேழைகள்

குழ. கதிரேசனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு மூன்று ஒலிப்பேழைகளாக வெளியாகின. பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா அவற்றைப் பாடினார்.

மொழிபெயர்ப்பு

குழ. கதிரேசனின் தொப்பைக் கோழி, மழலைப் பூக்கள், மழலை அரும்பு ஆகிய நூல்கள் மலையாளத்தில் முறையே பையனூர் பாஸ்கரன், ஆலப்புழா முரளீதரன், டாக்டர் ராஜேந்திர பாபு ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

குழ. கதிரேசனின் குழந்தைப் பாடல்கள், Central Institute of India Language மூலம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

குழ. கதிரேசனின் ‘எலி கடித்த பூனை’ என்னும் நூலில் உள்ள சில பாடல்கள் போலந்து, ரஷ்ய, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.


பதிப்பு

1974 முதல் 75 வரை தமிழ்ப் புத்தகாலயம் கண. முத்தையா அவர்களிடம் பணிபுரிந்தார். பதிப்பகத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை அவரிடம் கற்றுக் கொண்டார். 1975 முதல் 1984 வரை மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தின் சென்னைக் கிளை மேலாளராகப் பணியாற்றினார்.

ஐந்திணைப் பதிப்பகம்

தன்னுடைய பதிப்புலக அனுபவத்தைக் கொண்டு 1984-ல், ஐந்திணைப் பதிப்பகத்தை நிறுவினார் குழ. கதிரேசன். 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.


நூல்கள்

ஒலிப் பேழைகள்

மழலைப் பூக்கள்

தொப்பைக் கோழி

பேசும் கிளியே




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.