அட்டமங்கலம்

From Tamil Wiki

அட்டமங்கலம் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, சம்ஸ்கிருதத்தில் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம். அஷ்டமங்கலம் பல்வேறு வகைகளில் பூசைகளில் பயன்படுத்தப்படுகிறது. எட்டுவகை மங்கலப்பொருட்களால் ஆனது இது. (நவநீதப் பாட்டியல், பாடல் 52,↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843)

பார்க்க: சிற்றிலக்கியங்கள்

உசாத்துணை

  • நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
  • கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
  • சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்