சரவணதேசிகர்
சரவணதேசிகர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவத்துறவி. சைவ நூல்கள் பல எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
காஞ்சியில் செங்குந்தர் மரபில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். பள்ளிக்கல்விக்குப் பின் திருக்கயிலாயப் பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் திருஞான ஸ்வாமிகளிடம் இலக்கண இலக்கியங்கள் கற்றார். சைவ சித்தாந்த நூல்களைக் கற்றார். காஷ்யப ஸ்வாமிகளிடம் சந்தான சாஸ்திரங்களைக் கற்றார். ஸ்வர்க்கபுரம் தவப்பிரதாப மூர்த்திகளிடம் பஞ்சாக்கர உண்மை உபதேசம் பெற்றார். ஆனந்தருத்ரகதிரேசனுக்கு கோயில் கட்டினார். திருப்போரூர் சிதம்பர அடிகளிடம் கலா சோதனை முதலிய சைவச் சடங்குகள் கற்றார். நைஷ்டிக விரதத்தினராயிருந்து மாணவர்களுக்கு சைவ நூல்களைக் கற்பித்தார்.
இலக்கிய வாழ்க்கை
தனிப்பாடல்கள் பல பாடினார். சைவ நூல்கள் பல இயற்றினார். ஒருபா உண்மை உபதேசம், வீட்டு நெறி உண்மை, பஞ்சாக்கர அனுபூதி, உபதேச சித்தாந்த விளக்கம், ஒருபா ஒருபது, முக்தி முடிவு போன்ற நூல்களை எழுதினார்.
பாடல் நடை
முத்திதனில் நித்தியங் கண்டாசை யுற்றோன்
முதற்குருவாற் சமயநடை தருக்கம் விட்டுத்
தத்துவமும் ஆணவமுங் கழன்று நானே
தலைவனெனல் அருட்டெரிவால் தலைவன் என்னல்
மறைவு
சரவணதேசிகர் 1862-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- ஒருபா உண்மை உபதேசம்
- வீட்டு நெறி உண்மை
- பஞ்சாக்கர அனுபூதி
- உபதேச சித்தாந்த விளக்கம்
- ஒருபா ஒருபது
- முக்தி முடிவு
உசாத்துணை
✅Finalised Page