காலாபாணி

From Tamil Wiki
காலாபாணி

காலாபாணி (2021) மு.ராஜேந்திரன் எழுதிய நாவல். 1801 நடைபெற்ற சிவகங்கை போரில் பிரிட்டிஷாரால் தோற்கடிக்கப்பட்ட சிவகங்கை அரசகுடிகள் மலாயாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டதை பற்றிய நாவல்.2022 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றது.

எழுத்து வெளியீடு

மு.ராஜேந்திரன் 1801 என்னும் நாவலை 2016 ல் எழுதினார். அதில் காளையார்கோயில் போரில் வேலுநாச்சியார் தோற்கடிக்கப்பட்ட கதையை எழுதியிருந்தார்.அந்நாவலின் தொடர்ச்சியாக வேலுநாச்சியாரின் மகன் உட்பட குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்ட கதையை இந்நாவலில் எழுதினார். இதை அகநி பதிப்பகம் 2021ல் வெளியிட்டது

பின்னணி

கதைச்சுருக்கம்

1801ல் நடைபெற்ற போருக்குப்பின் வேலுநாச்சியாரின் மருமகனும், சிவகங்கை மன்னருமான வேங்கை பெரிய உடையணத்தேவர் கைதுசெய்யப்பட்டு திருமயம் கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பலில் பினாங்குக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். பிரிட்டிஷார் ஆட்சி செய்த மலாயாவில் வாழ்ந்து அங்கேயே மடிகிறார்கள்.

விருது

2022 கேந்திர சாகித்ய அக்காதமி விருது

இலக்கிய இடம்

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என வரலாற்றாசிரியர்களால் அடையாளப்படுத்தப்படும் நிகழ்வு காளையார்கோயில் போர். அதைப்பற்றிய வரலாற்று நாவலான காலாபாணி பெரும்பாலும் உண்மைநிகழ்வுகள், உண்மையான நிகழ்விட வர்ணனைகள் வழியாக அவ்வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறது

உசாத்துணை

காலாபாணி நாவலுக்கு சாகித்ய அக்காதமி விருது தினமணி