திருமுல்லைவாசல்

From Tamil Wiki

திருமுல்லைவாசல் ( வடதிருமுல்லைவாயில். திருமுல்லைவாயில்) சென்னைக்கு அருகே ஆவடியில் அமைந்துள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் ஆலயம். இறைவன் மாசிலாமணீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுந்தரரால் பாடப்பட்ட தலம் இது.

இடம்

சென்னைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடிக்கு அருகே திருமுல்லைவாயில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

தொன்மம்

வடமுல்லைவாயில் ஆலயத்தின் தொன்மங்கள் வடதிருமுல்லைவாயிற் புராணம் என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் திருமயிலை சண்முகம் பிள்ளை. அதில் கூறப்பட்டுள்ள தொன்மத்தின்படி வாணர்குலத்தைச் சேர்ந்தவர்களாகிய குறும்பர்களை வெல்ல தொண்டைநாட்டை ஆட்சி செய்த தொண்டைமான் படையுடன் வந்து இங்கே தங்கினான். தொண்டைமானின் யானையின் கால் முல்லைக்கொடியில் சிக்க அவன் அதை வெட்டியபோது கொடியில் இருந்து ரத்தம் வந்தது. அங்கே சிவலிங்கம் இருப்பதையும் அதில் வெட்டுபட்டிருப்பதையும் உணர்ந்த அவன் தலைநகராகிய காஞ்சியில் இருந்து பொன்கொண்டுவந்து திருமுல்லைவாயில் சிவன் ஆலயத்தை கட்டினான். தொன்ங்களின்படி இது பிருகு முனிவர், லவ-குசன், சந்திரன், இந்திரன், சுக்ரர் ஆகியோர் வந்து தவம் செய்து வழிபட்ட இடம். இங்கே பஞ்சம் வந்தபோது பிருகுமுனிவர் வேண்டியபோது பார்வதிதேவி மணிமழை பெய்யச்செய்தாள்.

பாடல்கள்

இந்த ஆலயத்தை அருணகிரிநாதர், மாதவச் சிவஞான யோகிகள், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், இரட்டைப் புலவர் முதலியோர் பாடியுள்ளனர். ஆலய அமைப்பு

வழிபாடுகள்

கல்வெட்டுகள்

உசாத்துணை