being created

சே. ராமானுஜம்

From Tamil Wiki

சே. ராமானுஜம் (1935 - டிசம்பர் 07, 2015) நாடகவியலாளர், நாடக ஆசிரியர், நவீன நாடக இயக்குனர், பேராசிரியர். தமிழகத்தில் அழிந்த நிலையிலிருந்த கைசிக புராண நாடகத்தை மீட்டெடுத்தவர். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கேரளத்திலும், தமிழகத்திலும் குழந்தை நாடகத்தில் தோற்றுவித்த முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சே. ராமானுஜம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிறந்தார்.

தனி வாழ்க்கை

சே. ராமானுஜம் காந்தியின் ஆதாரக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆரம்பப் பள்ளியில் பணியாற்றினார். அதன் பின் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ராமானுஜம் 1960 ஆம் ஆண்டு ஜி. சங்கரப்பிள்ளை, எஸ்.பி. சீனிவாசன் அறிவுரைப் படி டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே இந்திய நாடக ஆளுமையான இப்ராகிம் அல்காஜியின் கீழ் பயின்றார். 1967 ஆம் ஆண்டு கல்வியை முடித்த பின் பத்தாண்டுகள் மீண்டும் காந்திகிராமில் பணியாற்றினார்.

1977-ல் கோழிகோடு பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனராகவும், பின் திருச்சூர் நாடகப்பள்ளியின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். 1986ல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.

நூல்கள்

  • திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம், காலச்சுவடு பதிப்பகம்
  • குதிரை முட்டை (நாடகப் பிரதி - கட்டுரைகள் - நேர்காணல்), இதில் சே. ராமானுஜம் கட்டுரை, நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது)

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015), தொகுப்பு - சண்முக சர்மா, ஜெயப்பிரகாஷ் சர்மா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.