தேவாங்கர்

From Tamil Wiki
Revision as of 13:46, 28 November 2022 by Jeyamohan (talk | contribs)
தேவலமுனிவர், தேவாங்கர்களின் முதல்மூதாதை

தேவாங்கர் : (தேவாங்கச் செட்டியார்) தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் உள்ள நெசவாளர் சாதியினர். இவர்கள் பொயு 15 ஆம் நூற்றாண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்கள். இவர்களின் குலக்கதைகளில் இவர்கள் முதலில் அந்தணர்குலத்தில் ஒரு பிரிவாக இருந்தனர் என்றும், ஷத்ரியர்களாக நாடாண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தேவாங்க புராணம் இவர்களின் தொன்மக்கதைகளைச் சொல்கிறது