under review

செங்கண்ணன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 14:50, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

செங்கண்ணன் கூட்டம் (செங்கண்ணன் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியினரின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. செங்கண்ணான் என்பது சோழர் காலகட்டம் முதல் இருந்து வரும் பெயர்களில் ஒன்று.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

குளித்தலை வட்டரமான தென்கரை இராச கம்பீர வளநாட்டின் முதற்குடியாக செங்கண்ணன் குலத்தினர் வாழ்ந்தனர் . கடம்பன் குறிச்சி, சிதம்பரம் சிராமலை ஆகியன பண்டைய காணிகள்.

செங்கணால் குலத்தைச் சேர்ந்த லிங்கக்கவுண்டனுக்கு ஆதித்த சோழன் `பல்லவராயர் ` என்ற பட்டத்தை சோழன் வழங்கினான். காங்கேய நாட்டுக் காணியாள் வேல கவுண்டர் மகளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் . அதற்குச் சீதனமாகக் கங்கேயத்தைப் பெற்றனர். தலைநகரைக் காங்கேயத்திற்கு மாற்றி அகிலாண்டபுரம் அமைத்து அகிலாண்டவல்லி அம்மனை வைத்து வழிபட்டனர்.'செங்கண்ணர் குலத்தினர் மெய்க்கீர்த்தி' இதைத் தெரிவிக்கிறது. 'மதன செங்கண்ண குலமால்' - மதியூகி சிற்றழுந்தூர் சிங்கையம் என்ற வாலசுந்தரக் கவி 'கொங்குமண்டல சதகம்' நூலில் கூறுகின்றார் .

ஊர்கள்

அகிலாண்டபுரம், கொடுமுடி, கண்ணபுரம் , கடம்பன் குறிச்சி , இவர்களின் காணிகள்.

உசாத்துணை


✅Finalised Page