first review completed

சங்கர பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 18:52, 3 November 2022 by Logamadevi (talk | contribs)

சங்கர பண்டிதர் (1821-1891) ஈழத்து தமிழ் அறிஞர், சைவ அறிஞர். சைவ மதப் பிரச்சாரத்திலும், கிறிஸ்தவ மதம் பரவுதலைத் தடுப்பதிலும் பங்காற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சங்கர பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகம் என்னும் ஊரில், சிவகுருநாதருக்கு மகனாகப் பிறந்தார். நீர்வேலியில் வாழ்ந்தார். கந்தரோடை அப்பாப் பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வேதாரணியத்திலே சுவாமிநாத தேசிகரிடத்திற் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் ஆகியவற்றைக் கற்றார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமஸ்கிருத பண்டிதர்களுள் சிறந்தவர் என குறிப்பிடப்படுகிறார். சிவப்பிரகாச பண்டிதர் இவரின் மகன். சபாபதி நாவலர் இவரின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

சங்கர பண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவதூஷண கண்டனம், அனுட்டான விதி போன்ற சைவ சமய நூல்களை எழுதினார். 1957-ல் கிறிஸ்தவமத கண்டனம், மிலேச்ச மதவிகற்பம், சற்பிரசங்கம் ஆகிய நூல்களை தொகுத்து ச. பொன்னுசாமி “சங்கரர் பிரபந்தத்திரட்டு” என்ற பெயரில் வெளியிட்டார்.

மாணவர்கள்
  • சுன்னகம் முருகேச பண்டிதர்
  • கீரிமலைச் சபாபதிக் குருக்கள்
  • சிவப்பிரகாச பண்டிதர்

நூல் பட்டியல்

  • சைவப்பிரகாசனம்
  • சத்த சங்கிரகம்
  • அகநிர்ணயத் தமிழுரை
  • சிவபூசையந்தாதி உரை
  • கிறிஸ்துமதகண்டனம்
  • சிவதூஷண கண்டனம்
  • அனுட்டான விதி
  • சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
  • பிராசாத சட்சுலோகித் தமிழுரை
  • மிலேச்ச மதவிகற்பம்
  • சற்பிரசங்கம்
தொகுப்பு
  • பிரபந்தத்திரட்டு

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.