under review

வைரவன் லெ.ரா.

From Tamil Wiki
Revision as of 23:07, 9 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
Vairavan le.ra Image credits karthik k

வைரவன் லெ.ரா (06-08-1990) நாகர்கோயிலைச் தமிழில் சிறுகதைகள் ,கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

பிறப்பு,கல்வி

வைரவன் லெ.ரா, ஒழுகினசேரி நாகர்கோயிலில் பிறந்தவர்.  பெற்றோர் லெட்சுமணன்-ராஜலெட்சுமி. உயர்நிலை வகுப்புகளை எஸ். எம். ஆர். வி மேல்நிலைப் பள்ளி, வடசேரியிலும் மேல்நிலை வகுப்புகளை டி. வி. டி மேல்நிலைப் பள்ளி, கோட்டாரிலும் பயின்றார்.

மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பட்டயக் கல்வியை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, பழவிளையில் படித்தார்.கேப் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, லெவிஞ்சிபுரத்தில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம் பயின்றார்.

தனி வாழ்க்கை

திருமணமான ஆண்டு 2017. மனைவி மீனா. ஆண் குழந்தை சமீன் லக்சன்.

இலக்கிய வாழ்க்கை

இவரின் முதல் சிறுகதை 2019 பதாகை இணைய இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆக்கத்தில் முன்னோடிகளாக நாஞ்சில் நாடன், ஆ. மாதவன், அ. முத்துலிங்கம் ஆகியோரை கொண்டவர்.

இவரின் முதல் சிறுகதை தொகுப்பு, பட்டர் -பி & பிற கதைகள் யாவரும் பதிப்பகம் மூலம் 2021ல் வெளியிடப்பட்டது.

இலக்கிய இடம்

நாஞ்சில் எழுத்தாளனை அவர்களின் முன்னோடிகளே  பெரும்பாலும் வழி நடத்துகின்றனர்.  வைரவனின் கதைப்புலம், மனிதர்கள், நிலம், வட்டார வழக்கில் அந்த நிலத்தின் மனிதர்களே ஊடும் பாவுமாக தங்களை பிணைத்துக்கொண்டுள்ளனர். இவரின் கதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு நம்பகமான நிலத்தின் கதையாடல் அனுபவம் கிடைக்கின்றது.

நூல் பட்டியல்

சிறுகதைகள்
  • பட்டர் -பி & பிற கதைகள் (2021)




இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.