being created

குளச்சல் மு.யூசுப்

From Tamil Wiki
Revision as of 01:29, 7 November 2022 by Jayashree (talk | contribs)
குளச்சல் மு யூசுப்
யூசுப், புனத்தில் குஞ்ஞப்துல்லாவுடன்

குளச்சல் மு.யூசுப் ( பிறப்பு: அக்டோபர் 4, 1957) தமிழுக்கு மலையாளத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்கள் செய்பவர். வைக்கம் முகமது பஷீர், புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற மலையாளப் படைப்பாளிகளின் நூல்களின் தமிழ் மொழியாக்கங்களுக்காகப் புகழ்பெற்றவர். மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்

பிறப்பு, கல்வி

மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுப் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் நகரில் சாகுல் அமீது -கதீஜா பீவி இணையருக்கு அக்டோபர் 4,1957 அன்று ஆறு சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.

குளச்சல் இலப்பவிளை ஆரம்பப் பாடசாலையில் முகமது யூசுப் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தார்

தனிவாழ்க்கை

குளச்சல் மு.யூசுப் தன் 15-ஆவது வயதில் தன் தந்தையின் பெட்டிக்கடை ஒரு கலவரத்தால் சூறையாடப்பட்டபின் கன்யாகுமரிக்கு குடிபெயர்ந்து அங்கே குழந்தைத்தொழிலாளியாக பணியாற்றினார். ஷகீலா. ஷம்சுல் நிஷா, அல்அமீன். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நாகர்கோயிலுக்கு வந்தார். பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்டார். 17 வயது முதல் பதிமூன்று ஆண்டுக்காலம் பெட்டிக்கடை நடத்தினார். கடைகளில் உதவியாளராகவும் பணியாற்றினார். முழுநேர மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

இலக்கியவாழ்க்கை

குளச்சல் மு.யூசுப் தன் பன்னிரெண்டாவது வயதிலிருந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தாலும் 1983-ல் ஷாபானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவாக மறுமலர்ச்சி என்னும் இதழில் எழுதிய கட்டுரைதான் முதலில் பிரசுரமாகியது. குளச்சல் மு யூசுப் மொழியாக்கம் செய்த முதல் நாவல் புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய மலையாளநாவலான 'ஸ்மாரக ஸிலகள்'( தமிழில் மீசான் கற்கள்).

விருதுகள்

  • திருவள்ளுவர் திருச்சபையின், தமிழ்த் தொண்டர் விருது
  • தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு
  • ஆனந்தவிகடன் விருது
  • தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது
  • நல்லி – திசையெட்டும் விருது
  • உள்ளூர் பரமேஸ்வர அய்யர் விருது (கேரளா
  • இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது
  • வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது
  • ஸ்பாரோ விருது
  • கேந்திரிய சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது. (2018)

நூல்கள்

நாவல்
  • மீஸான் கற்கள் (புனத்தில் குஞ்ஞப்துல்லா)
  • மஹ்ஷர் பெருவெளி (புனத்தில் குஞ்ஞப்துல்லா)
  • அழியா முத்திரை (இ.பி.ஸ்ரீகுமார்)
  • ஒரு அமரகதை (எம். ஸ்ரீகுமார்)
  • மேலும் சில ரத்தக்குறிப்புகள் (எஸ். மகாதேவன் தம்பி)
  • சப்தங்கள் (வைக்கம் முகமது பஷீர்)
  • பர்ஸா (கதீஜா மும்தாஜ்)
  • பால்யகால சகி (வைக்கம் முகமது பஷீர்)
  • உப்பப்பாவுக் கொரு ஆனையிருந்தது (வைக்கம் முகமது பஷீர்)
  • சின்ன அரையத்தி (நாராயண்)
  • அக்னிசாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்)
  • ஆஸாதி (எஸ். மகாதேவன் தம்பி)
  • பாத்துமாவின் ஆடு (வைக்கம் முகமது பஷீர்)
  • நாலுகெட்டு (எம்.டி.வாசுதேவன் நாயர்)
  • காலம் (எம்.டி.வாசுதேவன் நாயர்)
தன்வரலாறு
  • ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(ஈச்சர வாரியர்)
  • நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (ராமச்சந்திரன் நாயர்)
  • நளினி ஜமீலா
  • வினயா
  • திருடன் மணியன்பிள்ளை (இந்துகோபன்)
  • அஜிதா
  • ஆமென் (சிஸ்டர் ஜெஸ்ஸி)
கட்டுரைகள்
  • அடூர் கோபால கிருஷ்ணன் (அக்பர் கக்காட்டில்)
  • உண்மையும் பொய்யும்
  • பாரசீக மகாகவிகள் (ஹுசைன் ஹைகல்)
சிறுகதைகள்
  • உலகப்புகழ்பெற்ற மூக்கு (வைக்கம் முகமது பஷீர்)
  • தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பு
  • ஆனைவாரியும் பொன் குருசும் (வைக்கம் முகமது பஷீர்)
  • அனல் ஹக் (வைக்கம் முகமது பஷீர்)
  • யௌவனத்தின் கடல்
மதம்
  • நபி பெருமகனார் ஹுசைன் ஹைகல்
  • உமறுல் கத்தாப்
மலையாளம்
  • நாலடியார்.
  • இன்னாநாற்பது
  • இன்னியவை நாற்பது
  • கார் நாற்பது
  • களவழி நாற்பது

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.