அகிலேஸ்வர சர்மா

From Tamil Wiki
Revision as of 06:56, 7 February 2022 by Jeyamohan (talk | contribs)
திருவெண்காட்டந்தாதி

சி. அகிலேஸ்வரசர்மா (1881-1940) இலங்கையின் சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். சோதிட வல்லுநர். யாழ்ப்பாணம் மண்டைத்தீவில் சித்திவினாயகர் கோயில் அர்ச்சகராக திகழ்ந்தார்

பிறப்பு, கல்வி

சி.அகிலேஸ்வர சர்மா யாழ்ப்பாணம் மண்டைதீவில் திருவெண்காடு சித்திவினாயக பிள்ளையார் ஆலயத்தில் அர்ச்சகராக விளங்கிய சிதம்பரநாத ஐயரின் மகன். அதே ஆலயத்த்தில் அர்ச்சகராகவும் சோதிடராகவும் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். இவருடைய புகழ்பெற்ற நூல் சோதிட வினாவிடை. இது சோதிடபரிபாலினி என்னும் பத்திரிகையில் தொடராக எழுதிய குறிப்புகள் 1933ம் வருடம் நூலாக வெளிவந்தது. திருவெண்காடு சித்திவினாயகர் பற்றி பாடியிருக்கிறார்.

நூல்கள்

  • திருவெண்காட்டுச் சித்திவிநாயகர் ஊஞ்சல் (1922)
  • திருவெண்காட்டந்தாதி (1922)
  • திருவெண்காட்டீசர் கும்மி (1922)
  • முருகன் கீர்த்தனைப் பதிகம் (19288)
  • நடராஜ பஞ்சரத்தினம் (1928)
  • மதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக் கீர்த்தனைப் பதிகம்

உசாத்துணை